ஆர்ப்பாட்டம்: தி.மு.க.,வினர் கைது
திண்டுக்கல், ஜூன் 30- திண்டுக்கல் தபால் நிலையம் அருகே தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் அஸ்வின், தினேஷ் தலைமை வகித்தனர். மாநகர செயலாளர் ராஜப்பா முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள், பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் 50க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.