உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 21 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

21 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

நெய்க்காரப்பட்டி: ஒடிசா மாநிலம் முனிகுடா பகுதியில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பழநி அருகே பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி., ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவில் டி.எஸ்.பி., தேவராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். பழநி பெத்தநாயக்கன்பட்டி அருகே கஞ்சாவை பங்கு பிரித்துக் கொண்டிருந்த சாமிநாதபுரம் ஹில்சன் 20, வி.கே.மில்ஸ் தர்ஷன் 20, ஜான்சன் 20, ஆகிய மூவரை கைது போலீசார் செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த மேலும் மூவருக்கு இதில் தொடர்புடையது தெரியவந்துள்ளது. அது குறித்து விசாரணை நடப்பதாக எஸ்.பி., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !