உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் விண்ணப்ப படிவம் கலெக்டரிடம் அ.தி.மு.க., முறையீடு

ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் விண்ணப்ப படிவம் கலெக்டரிடம் அ.தி.மு.க., முறையீடு

திண்டுக்கல்: ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மட்டுமே விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுவதையும், திரும்பப் பெறப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டுமென கலெக்டரிடம் அ.தி.மு.க., சார்பில் முறையிடப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சரவணனிடம் அளித்த மனுவில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான விண்ணப்ப படிவங்கள் நவ. 4 முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக கட்சியினர் விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நிலை அலுவலர்கள் மட்டுமே திரும்பப் பெற வேண்டும். இதை தீவிரமாக ஆய்வு செய்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மட்டுமே விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுவதையும், திரும்ப பெறப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை