அ.தி.மு.க., ஊர்வலம்
எரியோடு: காவிரி உபரிநீரை குழாய் மூலம் கொண்டு வந்து வேடசந்துார் தொகுதியில் இருக்கும் குளங்களில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் விவசாயிகளிடம் வேண்டுகோள் கடிதங்கள் பெற கலந்தாய்வு கூட்டம், விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் அ.தி.மு.க., சார்பில் நடந்தது. புதுரோட்டில் துவங்கிய ஊர்வலம் கிராமங்கள் வழியே சென்றது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், நகர செயலாளர் அறிவாளி, ஜெ.,பேரவை ஒன்றிய செயலாளர் ஆண்டவர் பங்கேற்றனர்.