மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நியமனம்
04-Apr-2025
திண்டுக்கல்: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வேடசந்தூரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, சிலை நிறுவனர் தலீத்சிவா, சிலை பரமரிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்தேவி மாலை அணிவித்தனர். * வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ரவிசங்கர் பங்கேற்றனர். * வி.சி.க., ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் நாசர்மைதீன், பொன்கண்ணன், கர்ணன், சக்திவேல் பங்கேற்றனர்.*திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மாலை அணிவித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.* அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் திண்டுக்கல் ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கண்ணன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். இதில் நிதிச்செயலர் தமிழ்செல்வி, மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.* திண்டுக்கல்லில் தி.மு.க., அலுவலகத்தில் உருவப்படத்திற்கு அமைச்சர் பெரியசாமி மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால், மார்கிரேட் மேரி, பொருளாளர் சத்திய மூர்த்தி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகர் பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் உருவப்படத்திற்கு அமைச்சர் சக்கரபாணி, வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, அவைத் தலைவர் மோகன், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், நத்தம் பேரூராட்சித் தலைவர் சிக்கந்தர் பாட்ஷா கலந்து கொண்டனர்.
04-Apr-2025