கொலை முயற்சி; ஒருவர் கைது
நெய்க்காரப்பட்டி: பழநி பெருமாள் புதூர் பகுதியில் வாலிபர் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொல்ல முயன்ற தம்பதியரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பழநி,நெய்க்காரப்பட்டி அருகே பெருமாள் புதூர், காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் 50, சின்னம்மாள் 42, தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகே திருமூர்த்தி 30 வசித்து வருகிறார். முருகன், திருமூர்த்தி இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சாவடியில் திருமூர்த்தி உறங்கி உள்ளார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் முருகன்,சின்னம்மாள் இருவரும் திருமூர்த்தி தலையின் மீது கல்லைத் தூக்கிப் போட்டனர். தலையில் காயத்துடன் உயிர் தப்பினார். தாலுகா போலீசார் முருகனை கைது செய்தனர். தப்பி ஓடிய சின்னமாளை தேடி வருகின்றனர்.