உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாநில சுயாட்சியை அழிக்க பா.ஜ., முயற்சிக்கிறது

 மாநில சுயாட்சியை அழிக்க பா.ஜ., முயற்சிக்கிறது

பழநி: மாநிலங்களின் சுயாட்சியை அழிக்க பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, என மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி குற்றம்சாட்டினார். பழநி சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பேபி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: பா.ஜ., அரசாங்கம் இந்தியாவை மோசமாக்கும் வகையில் உள்ளது. அத்தகைய பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கைகோர்த்துள்ளது. கீழடிஅகழ்வாராய்ச்சியில் மகத்தான நாகரிகத்தை கண்டறிந்துள்ளனர். பா.ஜ.,வினரால் கீழடியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நபர்கள் உள்ளனர். ஆனால் பா.ஜ., ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்கிறது. மாநிலங்களின் சுயாட்சியை அழிக்க பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாநில உரிமைகளை பறிக்கின்றனர். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை பா.ஜ., அரசு சரியாக பங்கீடு செய்யவில்லை. இதனால் மாநில அரசின் சமூக நலத்திட்டங்கள் சீர்குலைகின்றன. பழநிக்கு காவடி எடுத்தாலும் தாமரை தமிழகத்தில் மலராது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !