கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
கள்ளிமந்தையம்:மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை கண்டித்து கள்ளிமந்தயத்தில் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சக்கரபாணி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும், சட்ட நகலை தீயிட்டு கொளுத்தியும் கண்டனத்தை தெரிவித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தங்கம், தர்மராஜ், பொன்ராஜ், பாலு, சுப்பிரமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.