உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் புத்தக விற்பனை நிலையம் துவக்கம்

பழநியில் புத்தக விற்பனை நிலையம் துவக்கம்

பழநி : பழநி முருகன் கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து பழநி கோயிலில் கலெக்டர் சரவணன் முதல் விற்பனையை துவங்கி வைத்தார். புத்தக நிலையத்தில் பக்தி புத்தகங்கள், இலக்கியங்கள், தல புராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறு, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளின் கருத்துக்கள் ,சித்தரின்நுால்கள் என 216 புத்தகங்கள் உள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர்கள் மாரிமுத்து, கார்த்திக், துணை கமிஷனர் வெங்கடேஷ், பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி கலந்து கொண்டனர்.இதேபோல் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலிலும் புத்தக விற்பனை நிலையம் துவங்கி வைக்கப்பட்டது .இதில் உதவி கமிஷனர் லட்சுமி கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ