உதயநிதிக்கு பிராமண ஸமாஜம் கண்டனம்
பழநி: தமிழ்நாடு பிராமண ஸமாஜ நிறுவன தலைவர் ஹரிஹர முத்து அய்யர் அறிக்கை: சனாதன தர்மம் நம் பாரம்பரியத்தின் அடித்தளமாக இருந்து அறம், ஒழுக்கம், மனிதநேயம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துவது. அதை ஒழிக்க வேண்டும் என கூறுவது கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல். சட்டசபை மக்கள் நலனுக்காக விவாதிக்கப்படும் இடம். மதங்களை தாக்கும் மேடையல்ல. உதயநிதி கூறிய கருத்தை தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கடுமையாக கண்டிக்கிறது. அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு மத ஒற்றுமையை காக்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.