உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மருத்துவமனையில் வசதி செய்ய வழக்கு

மருத்துவமனையில் வசதி செய்ய வழக்கு

தாண்டிக்குடி : மதுரை வெரோணிகா மேரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி தாண்டிக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு 'அல்ட்ராசவுண்ட்' ஸ்கேன் இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்குரிய தொழில்நுட்ப பணியாளர்கள், டாக்டர்களை நியமிக்க வேண்டும். ஆப்பரேஷன் தியேட்டர் செயல்படுவதற்குரிய கட்டமைப்பு வசதிகளை நிறை வேற்றக்கோரி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரரின் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள் சுகாதாரத்துறை செயலர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.27 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை