மத்திய பாதுகாப்புப்படை வருகை
திண்டுக்கல்: சட்டசபை தேர்தலை தொடர்ந்து மத்திய அரசின் பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்த 75 பேர் நேற்று திண்டுக்கல் வந்தனர். இவர்கள் திண்டுக்கல் டி.ஐ.ஜி., சசிமோகனை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தனர். ஓட்டுச்சாவடிகள், பதட்டமான இடங்கள், ஓட்டு எண்ணிக்கை மையம், ஓட்டுப் பதிவு இயந்திரம் பாதுகாப்பு மையம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எஸ்.பி., பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.