மேலும் செய்திகள்
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
08-Nov-2025
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகன சோதனை என்ற பெயரில் வெளி மாநில பயணிகளிடம் போலீசார் நுாதனமாக வசூல் செய்வதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கின்றனர். கொடைக்கானலுக்கு நாள்தோறும்ஏராளமான வாகனங்களில் பயணிகள் வருகின்றனர். காட்ரோட்டில் துவங்கி கொடைக்கானல் இடையே போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபடுகின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள காமக்காப்பட்டி, பழநி போலீஸ் சோதனை சாவடியில் வாகனங்கள் சோதிக்கபடுகின்றன. இதோடு தாண்டிக்குடி, கொடைக்கானல் பகுதிகளிலும் நாள்தோறும் போலீசார் வாகன சோதனை செய்கின்றனர். சோதனையில் ஈடுபடும் போலீசார் முறையான ரசீது வழங்காமல் வெளி மாநில பதிவு எண் வாகனங்களில் வரும் பயணிகளிடம் அபராதம் என்ற பெயரில் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக வெளி மாநில பயணிகள் சமூக வலைதளங்களில் புகார்களை தொடர்ச்சியாக பதிவு செய்கின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Nov-2025