காங்., ஆர்ப்பாட்டம்
வேடசந்துார்: வேடசந்துார் ஆத்துமேட்டில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில், மத்திய அரசின் தொகுதி மறு வரையறை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., மேற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி., வரி கூடுதலாக வசூல் செய்தும், தமிழகத்திற்கு முறையான நிதி வழங்குவது இல்லை. தமிழகத்திற்கு கல்வி நிதி முறையாக வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்டாரத் தலைவர்கள் சதீஷ், பகவான், கோபால்சாமி, முரளி, பாலன், நகரத் தலைவர்கள் கார்த்தி, ஜாபர் அலி மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.