மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக்: என்.பி.ஆர்., குழுமம் வெற்றி
28-Jun-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் முதல் டிவிஷன் சூப்பர் லீக்கில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வென்றது.திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டிகள் ஆர்.வி.எஸ்.,மைதானத்தில் நடந்தது. திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 232/8. பாலசுப்பிரமணி 54, மணிகண்டன் 54, ஸ்ரீமுகேஷ்வரன் 45 (நாட்அவுட்), இளையராஜா 4 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் சிசி அணி 45 ஓவர்களில் 233/6 எடுத்து வென்றது. இளையராஜா 69 (நாட்அவுட்), ராஜேஷ்கண்ணன் 65. திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 34.2 ஓவர்களில் 146 க்கு ஆல்அவுட் ஆனது. கவுதம் 48, பணபாண்டி 28, நவீன்குமார் 25. சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசி அணி 36 ஓவர்களில் 147/4 எடுத்து வென்றது. ஜெயந்த் 41 (நாட்அவுட்). திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 36.2 ஓவர்களில் 156 க்கு ஆல்அவுட் ஆனது. சஞ்சய்வெங்டேஷ்வர் 84, பாலாஜி 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் சிசி அணி 32.5 ஓவர்களில் 160/8 எடுத்து வென்றது. இளையராஜா 76, மீதாஜீவன் 33, சந்துரு, முகமதுஅப்துல்லா தலா 3 விக்கெட்.
28-Jun-2025