உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இறந்து விழும் காகங்கள்; கிராம மக்கள் சோகம்

 இறந்து விழும் காகங்கள்; கிராம மக்கள் சோகம்

வேடசந்துார்: மல்வார்பட்டி ஊர் மந்தையில் உள்ள மரங்களில் இரவு நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காக்கைகள், குருவிகள் தங்கி செல்வது வழக்கம். அதிகாலை நேரங்களில் இந்த பறவைகளின் கீச் கீச் சத்தத்தால் மக்கள் நேரத்திலே எழுந்து தங்களது பணிகளை கவனிப்பது அன்றாட வழக்கம். இந்நிலையில் மற்ற பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் காகங்கள் மட்டும் சமீப நாட்களாக மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விடுகின்றன. இறந்து விழும் காகங்களை இளைஞர்கள் எடுத்து புதைத்து வருகின்றனர். இறந்து விழும் காகங்களை ஆய்வுக்கு அனுப்பி அதற்கான காரணத்தை கண்டறிந்து தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி