உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அக்ரி ஸ்டேக் பதிவுக்கு கால அவகாசம்

அக்ரி ஸ்டேக் பதிவுக்கு கால அவகாசம்

திண்டுக்கல் : அக்ரி ஸ்டேக் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய மார்ச் 31 கடைசி நாள் என்றிருந்த நிலையில் ஏப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும், 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி ஆதார் போல் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும். இந்த பணிகள் பிப்ரவரில் தொடங்கப்பட்டது. மார்ச் 31 க்குள் இந்த பதிவேற்றம் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி பொது இ-சேவை மையங்களிலும் அக்ரிஸ்டேக்கில் பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1.54 லட்சம் விவசாயிகளில் இதுவரை 84ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் அக்ரிஸ்டேக் பதிவுக்கான கால அவகாசம், ஏப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மீதமுள்ள 54 சதவீத விவசாயிகள் தங்களின் நில விவரங்களை , வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்களிலோ பதிவேற்றம் செய்யலாம் என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ