ஆர்ப்பாட்டம்
பழநி:விவசாயத்திற்கு தேவையான உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் கடன்களை பாரபட்சம் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி ,பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமசாமி, பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டனர்.