உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் 

திண்டுக்கல், செப்.8 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநில முழுவதும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணைச்செயலாளர் இந்திரா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் ஆண்டி அம்மாள் வரவேற்றார். கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !