போக்சோவில் டிரைவர் கைது
வடமதுரை: வேடசந்துார் திருமாணிக்கனுார் வேன் டிரைவர் ராஜ்குமார் 36. இவர் 10-ம் வகுப்பு மாணவியிடம் தன்னுடன் பேசி பழகுமாறு கூறி தொல்லை கொடுத்தார். இதனால் அச்சமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, வடமதுரை மகளிர் போலீசிற்கு புகார் சென்றது. இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தார்.