உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலைத்திருவிழா போட்டிகள்

கலைத்திருவிழா போட்டிகள்

வேடசந்துார்:வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் செல்வராணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் நல்லுசாமி, முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கிராமியப்பாட்டு, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், தெம்மாங்கு, சிங்கப்பெண் விழிப்புணர்வு பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 77 அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !