மேலும் செய்திகள்
'கொடை'யில் மிதமான மழை
15-Oct-2025
கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை.சில தினங்களுக்கு முன் கோடையை நினைவு கூறும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. நகரை சூழ்ந்த பனிமூட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. குளிரை தாங்கும் ஸ்வொட்டர் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளுடன் பயணிகள் நடமாடினர்.
15-Oct-2025