வீட்டின் பீரோவை உடைத்து கொள்ளை
நத்தம்:-நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி விஜயகுமார் 27. இவரது மனைவி கோமதி 22. இவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து மோதிரம், ரூ.40 ஆயிரம் , வாட்ச் கொள்ளை போயிருந்தது. நத்தம் எஸ்.ஐ., சமலைச்சாமி விசாரிக்கிறார்.