மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
நிலக்கோட்டை: தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயலட்சுமி கொடியேற்றினார். மண்டல துணை தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுபாஷினி பிரியா கொடி ஏற்றினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார் செயல் அலுவலர் மோகன் குமார் வரவேற்றார். ஹெச்.என். யு. பி. ஆர். மெட்ரிக் பள்ளியில் தலைவர் சுசீந்திரன் கொடியேற்றினார். தாளாளர் உதயசூரியன் பேசினார். முதல்வர் குமரேசன் வரவேற்றார். குமரப்ப செட்டியார் நினைவு மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் நாகராஜன் கொடியேற்றினார். வேடசந்துார் :விருதலைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி சாரண சாரணியர் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சுதந்திரதினத்தை யொட்டி நோயாளிகளுக்கு பிரட் வழங்கினர். அரசு டாக்டர் லோகநாதன், அரசு பள்ளி சாரண சாரணியர் இயக்க தலைவர் ஜெயமீனாம்பிகை, தலைமை ஆசிரியர் சடையாண்டி, ஆசிரியர் செல்வராஜ் பங்கேற்றனர். திண்டுக்கல்: வேதாத்திரி சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளியில் தாளாளர் எம்.கே.தாமோதரன் தலைமை வகித்தார். செயலாளர் நளினி முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் தெய்வேந்திரன் கொடியேற்றினார். முதல்வர் மலர்விழி நன்றி கூறினார். தொப்பம்பட்டி: பழநி தொப்பம்பட்டி அருகே தும்பலப்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 24 கிலோ கல்உப்பை பயன்படுத்தி சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட வண்ணங்களை கொண்டு மகாத்மா காந்தி உருவப் படத்தை மாணவிகள் உருவாக்கினர். இவர்களை பள்ளி அறக்கட்டளை தலைவர் நடராஜ், தலைமை ஆசிரியர் ரட்சுமராஜூ, ஓவியஆசிரியர் விஜி பாராட்டினர்.
16-Aug-2025