உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இரும்பு அடுப்பும் விலை உயர்வு

 இரும்பு அடுப்பும் விலை உயர்வு

திண்டுக்கல்: காஸ் தட்டுப்பாடால் இரும்பு அடுப்பு ரூ.5 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் மாற்று ஏற்பாடுக்கு பலரும் தயாராகிவிட்டனர். பல ஓட்டல்களில் விறகு, கரி அடுப்புகள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்கான இரும்பு அடுப்புக்கு தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை ரூ.45 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இரும்பு அடுப்பு ரூ.50 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. பழநி ரோட்டில் ஓட்டல் நடத்தி வரும் தண்டபாணி கோவையில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கு இந்த அடுப்பை வாங்கி உள்ளார். அவர் கூறியதாவது : வணிக காஸ் சிலிண்டர் நாள்தோறும் 2 சிலிண்டர் பயன்படுத்தி வந்தோம். காஸ் தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விறகு வைத்து எரிக்கும் அடுப்பை வாங்கியுள்ளேன். அதிலும் 2 அடுப்பு கேட்டதற்கு ஒன்றை மட்டுமே கொடுத்தனர். விறகும் விலை அதிகரித்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ