நுாலக விழிப்புணர்வு முகாம்
செம்பட்டி: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான நுாலக விழிப்புணர்வு முகாம் சித்தையன்கோட்டை கிளை நுாலகத்தில் நடந்தது. நுாலக ஆய்வாளர் முத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆர்.ஐ., சரவணன் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியின் 4, 5ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் நுாலகத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள், விதிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஆசிரியர்கள் உட்பட 54 பேர் தங்களை நுாலகத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பானுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், ஆசிரியர்கள் புவனேஸ்வரி, ராமபிரபா, தன்னார்வலர்கள் மினிபிரியா, அழகேஸ்வரி பங்கேற்றனர். ஆசிரியர் ராமு ஏற்பாடுகளை செய்திருந்தார்.