மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் தூய்மை இந்தியா திட்டப் பணி
26-Sep-2025
பழநி : பழநி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் அங்கிருந்த அதிகாரிகளை கண்டித்தார். பழநி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் காத்திருப்பு அறை, வாகனம் நிற்கும் இடம், நகரும் படிக்கட்டு, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன. இதை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்பகுதியில் இருந்த தண்ணீர் குழாயை திறந்த போது தண்ணீர் வராததால் அருகில் இருந்த அதிகாரிகளை கண்டித்தார். பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தர உத்தரவிட்டார். பிளாட்பாரம் பகுதிகளில் பெயர்ந்து கிடந்த கற்களை சரி செய்யவும் அறிவுறுத்தினார்.
26-Sep-2025