மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முகூர்த்தக்கால் ஊன்றும் விழா
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.பழநி கிரிவீதி, சன்னதி வீதி சந்திப்பில் பாத விநாயகர் கோயில் அருகே கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் கோயில்,கருவறை பாலாலய பூஜை நடைபெற்றது. புனரமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேகம் முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யாக பூஜை உடன் முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கும்ப கலசத்துடன் முகூர்த்தக்கால் கோயில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டது. முகூர்த்தக்கால் கோயிலின் கிழக்குப் பகுதி கிரி வீதியில் ஊன்றப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் ஜன.20ல் நடக்க உள்ளது.