மினிபஸ் சிறைபிடிப்பு
பழநி:பழநி தட்டாங்குளம் பகுதியில் மின்கம்பம் மீது மோதிய மினிபஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் வழியாக சென்ற மினிபஸ் மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து அருகில் உள்ள கூரை வீட்டின் மீது விழுந்தது. அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மின்கம்பம் சேதமானதற்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பஸ் உரிமையாளர் பேச்சுவார்த்தைக்கு பின் பஸ்சை விடுவித்தனர்.