பள்ளி சிறுவனுக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
வடமதுரை : கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நாகன்களத்துாரை சேர்ந்த 10 வயது சிறுவன் முகேஷ் 5ம் வகுப்பு படிக்கிறார். வட்டார அளவில் 11 வயதிற்குட்ட பிரிவில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் என 20 பள்ளிகள் பங்கேற்ற சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றார். இக்கிராமத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜனிடம் பள்ளி ஆசிரியர்கள் இத்தகவலை தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற எம்.எல்.ஏ., அவருக்கு சால்வை அணிவித்து ரொக்க பரிசு தந்து பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மரிய கிளாடிஸ், உடற்கல்வி ஆசிரியர் அருண் ஜெயசீலன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன் உடனிருந்தனர்.