உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பக்தர்களை கடித்த குரங்குகள்

 பக்தர்களை கடித்த குரங்குகள்

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கார்த்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் வந்தனர். அங்கு சுற்றித்திரிந்த குரங்குகள் திடீரென பக்தர்கள் மீது பாய்ந்து கடித்தன. சிறுவன் உட்பட இருவர் காயம் அடைந்தனர். செங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். கோயிலில் 100க்கு மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவைகளை பிடித்து வனப்பகுதியில் விட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை