உள்ளூர் செய்திகள்

 அமாவாசை வழிபாடு

செம்பட்டி :சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயிலில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ