உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்நடைகளுக்கு இல்லை மருத்துவமனை நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு தாமரைப்பாடி ஊராட்சியில் தத்தளிக்கும் மக்கள்

கால்நடைகளுக்கு இல்லை மருத்துவமனை நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு தாமரைப்பாடி ஊராட்சியில் தத்தளிக்கும் மக்கள்

திண்டுக்கல்: கால்நடைகளுக்கு இல்லை மருத்துவமனை,நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு என தாமரைப்பாடி ஊராட்சி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் , சாலையூர், அம்மா குளத்துப்பட்டி, அண்ணா நகர், கல்லாத்துபட்டி, கம்மாளபட்டி, யாகப்பன்பட்டி, ராஜிவ்காந்தி நகர், முஸ்லிம் தெரு, நாகம்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, தாமரைப்பாடி, தன்னாசி பாறைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த ஊராட்சியில் மில் கூலி தொழிலாளிகள், தினசரி கூலி வேலைக்கு செல்வோர், கட்டட வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், விவசாயக்கூலிகள் என அன்றாட வேலை செய்யும் ஏழை- மக்களே அதிகம் வசிக்கின்றனர். ஊராட்சியை சுற்றிலும் குளங்கள், கண்மாய்கள், நீர் பிடிப்பு இடங்கள் என நீர் ஆதாரங்கள் பெருகி இருக்கும் போதிலும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர் வருவது தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலையை யொட்டிய ஊராட்சி என்பதால் பொது இடங்கள், பொதுப்பாதைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. வரத்துகால்வாய் இல்லாதது, கழிவு நீர் கால்வாய் இல்லாதது போன்ற அடிப்படை வசதி குறைபாடுகளாலும் ஊராட்சி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இன்று வரை நிறைவேற்றவில்லை தாமரை பாலன், கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர்: ஊராட்சியில் கூலி வேலை செய்வோரை அடுத்து பிரதானமாய் இருப்பது கால்நடை வளர்ப்பு தொழில்தான். சுயதொழிலாகவும், முழு நேரமாகவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். கால்நடை பராமரிப்புக்கான கட்டமைப்பு வசதிகள் இந்த ஊராட்சியில் இல்லை. கால்நடைகளுக்கு சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் ம.மூ.கோவிலுாருக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்சென்றால் டாக்டர்கள் இருப்பதில்லை. கால்நடை வளர்ப்பை பிரதானமாக கொண்ட இந்த ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர வேண்டும் என நீண்டக்காலமாக கோரியும் இன்று வரை நிறைவேற்றவில்லை. கல்லாறு வழித்தட பாதைகள் ஆக்கிமிக்கப்பட்டு நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்பிடிப்பு வசதி பெறும் பெரும்பாலான, குளம், குட்டைகள் தனியே தவிக்கப்படப்பட்ட காலி நிலம்போல் அதன் தன்மையை இழந்து நிற்கிறது. அகற்றப்படாத ஆக்கிரமிப்பு வேல்முருகன், வழக்கறிஞர்: நீர் ஆதாரங்கள் மிகுந்த தாமரைபாடி ஊராட்சியில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் மழைநீர் வரத்து இல்லாமல் விவசாய நிலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் விவசாயத்தை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். ஊரில் கொஞ்சம் நடக்கும் விவசாயமும் பருவமழையை நம்பியே நடக்கிறது. அதுவும் இல்லாவிட்டால் ஊரே வெறுமையாகிவிடும். நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என நீதமன்றம் உத்தரவிட்டும் தாமரைப்பாடி போன்ற கிராமப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளது. நெடுஞ்சாலை ஒட்டிய இடங்களில் போதுமான மின் விளக்கு வசதி இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ