சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அங்கன்வாடி - சத்துணவு பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்கள் நிலையில் சமையலர்களுக்கு ரூ.19,500, உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15,700 அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி 2வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் நடத்தினர். ஐ.சி.டி.எஸ்., அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க நிர்வாகி தமிழ்செல்வி தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ,மாநில இணைச் செயலாளர் இந்திரா பேசினர். சத்துணவு -அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, தண்டபாணி பங்கேற்றனர்.