உள்ளூர் செய்திகள்

ஓணம் கொண்டாட்டம்

ஒட்டன்சத்திரம், ஆக.26- ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வான வாமனன் அவதாரம், மகாபலியை மீண்டும் வரவேற்கும் நிகழ்வு, மாணவர்களின் அணிவகுப்பு, கேரளாவின் பாரம்பரிய பாடலான வஞ்சிப்பாட்டு ஆகியவற்றை மாணவ, மாணவிகள் நடத்தி கட்டினர். பூக்கோலம் இடுதல், திருவாதிரை களி குழு நடனம், பாடல்கள் நடந்தது. பள்ளி முதல்வர் சவும்யா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். வடமதுரை: குளத்துார் ஆர்.வி.எஸ்., எம்.பி.ஏ., கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆர்.வி.எஸ்., குழும இயக்குநர் மைதிலி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குநர் ரஞ்சித், துறைத்தலைவர் சபானா அஷ்மின், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை