உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் குவிந்த பயணிகள்

கொடையில் குவிந்த பயணிகள்

கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் சில தினங்களாக பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. நேற்று மதியத்திற்கு பின் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. இங்குள்ள பிரையன்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் ரசித்தனர். தொடர்ந்து ஏரியில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சில தினங்களாக நீடித்த போக்குவரத்து நெரிசல் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. பழநியில் கூட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம், குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை