மக்கள் அதிக ஆதரவு தர வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி பேச்சு
நத்தம்: ''வருங்காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் அதிக ஆதரவு தர வேண்டும் ''என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார். சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தலைமை வகித்த அவர் பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என அரசின் நலத்திட்டங்களை கட்சி, சாதி, மதம் பார்க்காமல் செயல்படுத்தி வருகிறார்.வருங்காலத்தில் அவருக்கு அதிக ஆதரவை தரவேண்டும், இந்த முகாமில் நீங்கள் கொடுக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 45 நாட்களில் உரிய தீர்வு வழங்கப்படும் என்றார். தொடர்ந்து நத்தத்தில் 6 கோடியே 26 லட்சம் மதிப்பில் புதிய பேரூராட்சி அலுவலகம், அறிவுசார் மையம் , நத்தம் அரசு மருத்துவமனையில் கூடுதல் அறுவை சிகிச்சைமையம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இதை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா, ஆர்.டி.ஓ., சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன்,நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், தர்மராஜன், பழனிச்சாமி, ஜான் பீட்டர், நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் விஜயநாத்,துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டனர்.