கொடை கிளாவரையில் நிலப்பிளவு குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிளாவரை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள நில பிளவால் மரங்கள் சாய்ந்துள்ளன. கொடைக்கானல் கிளாவரை ஆணைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செருப்பன் ஓடை அமைந்துள்ளது. இதன் மூலம் கிளாவரை கிராமத்திற்கு குடிநீர், விவசாயம் நடக்கிறது. 2024ல் பெய்த கனமழையின் போது வனப்பகுதியில் 500 மீட்டர் துாரத்துக்கு பாசன வாய்க்காலில் நிலப்பிளவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து புவியியல் துறையினர் ஆய்வு செய்து பிளவால் பாதிப்பு இல்லை என அறிவித்தனர். கிராமத்தினர் பாசனம், குடிநீர் தேவைக்கு வாய்க்காலை சீரமைக்க கோரினர். ஓராண்டாகியும் சீரமைக்காத நிலையில் கிராமத்தினர் தாங்களே முன்வந்து பைப் லைன் அமைத்து குடிநீர் வசதியை பூர்த்தி செய்தனர். சில வாரங்களுக்கு முன் பெய்த மழையில் ஓடையில் மேலும் விரிசல் ஏற்பட்டு குடிநீர் பைப் லைன் சேதமடைந்து மரங்களும் சாய்ந்தன. குடிநீர் பிரச்னை ஏற்பட கிராமத்தினர் அருகிலுள்ள நீர்நிலைகளை பயன்படுத்தி வரு கின்றனர். செருப்பன்ஒடையில் ஏற்பட்டுள்ள பிளவை சீரமைத்து பாசனம், குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.