போலீசார் கொடி அணிவகுப்பு
பழநி: சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பழநியில் மத்திய பாதுகாப்பு படை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொடி அணிவகுப்பை டி.எஸ்.பி., தனஜெயன் துவங்கி வைத்தார். பட்டத்து விநாயகர் கோயிலில் துவங்கி முக்கிய ரோடுகள் வழியாக சென்று ரயில்வே ஸ்டேஷனில் நிறைவடைந்தது. இதுபோல் பாலசமுத்திரம் பேரூராட்சியிலும் கொடி அணிவிப்பு நடந்தது.