உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தபால் நிலையம் முற்றுகை: மாணவர்கள் கைது

தபால் நிலையம் முற்றுகை: மாணவர்கள் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டக்குழு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நிருபன் தலைமை வகித்தார். தலைவர் தீபக்ராஜ் பேசினார். தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 4 மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !