மேலும் செய்திகள்
காதல் ஜோடி தஞ்சம்
13-Jan-2025
கடைக்கு தீவைப்பு
30-Jan-2025
வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் நான்குவழிச்சாலை திண்டுக்கல் எரியோடு மாநில நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் உள்ளது பி.கொசவபட்டி. இங்கிருந்து திண்டுக்கல்லிற்கு திருக்கண், குளத்துார் வழியே வெகுசில டிரிப் பஸ் சேவை உள்ளது. வடமதுரை வேடசந்துார் செல்லும் ஒரு டிரிப் மட்டும் காலை நேரத்தில் இவ்வழியே செல்கிறது. பாடியூர், முள்ளிப்பாடி வழியே பகலில் 3 டிரிப்கள் முழுமையாக கிராமங்கள் வழியே வந்து அதே பாதையில் திரும்புகிறது. இந்த பஸ்சின் கடைசி இரவு டிரிப் மட்டும் திண்டுக்கல்லில் வரும்போது பி.கொசவபட்டி வழியே வந்து வடமதுரை செல்கிறது. திரும்பும்போது நேர்வழியில் தாமரைப்பாடி வழியே செல்கிறது. இதனால் மாலை 5:00 மணிக்கு பின்னர் வடமதுரையிலிருந்து கிராமத்திற்கு பஸ் சேவையின்றி தவிக்கின்றனர். கடைசி டிரிப் திரும்பும் போதும் முறையான பாதையில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Jan-2025
30-Jan-2025