சேதமான மின் கம்பத்தால் காத்திருக்கு விபத்து அபாயம்
மூடப்படாத பள்ளம் திண்டுக்கல் மாலப்பட்டி ரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் விபத்துக்கு முன் சரி செய்ய வேண்டும். முனியப்பன், திண்டுக்கல். ..............---------- வீணாகும் குடிநீர் பழநி பெரிய கடை வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே பல நாட்களாக குடிதண்ணீர் வீணாகிறது. குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவும் வேலையில் வீணாகி வரும் இதை சரி செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முகமது ஜின்னா, பழநி. ................--------- சேதமான மின் கம்பம் செங்குறிச்சி குரும்பப்பட்டியில் 3 ரோடு சந்திப்பு பகுதியில் ரோட்டோர மின்கம்பம் சேதமடைந்து இருப்பதால் உடைந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க முன் வர வேண்டும். - --பாண்டியன், கம்பிளியம்பட்டி. ..........--------- சாக்கடையில் அடைப்பு திண்டுக்கல் என். ஜி. ஓ .காலனி ரங்கநாதபுரத்தில் சாக்கடை அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் செல்கிறது. குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது . இதை கருதி சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன், திண்டுக்கல். ...................---------இ சேவை மையம் அருகே குப்பை திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் இ சேவை மையம் அருகே குப்பை குவிந்துள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் குப்பையை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமார், திண்டுக்கல். ............--------- ரோட்டில் தேங்கும் தண்ணீர் நத்தம் சேர்விடு அவுட்டர் பகுதியில் நத்தம் -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மழை பெய்தாலே சாலையில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. இதனால் டூவீலர்களில் செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது. பி.வீரராகவன், நத்தம். ...............---------- ரோடை சீரமையுங்க திண்டுக்கல் அருகே சாலையூர் அமராவதி நகரில் ரோடு சேதமடைந்து ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது .பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது .ரோட்டை சீரமைக்க வேண்டும். சந்தானம், திண்டுக்கல். ..........