பாதாளசாக்கடை அடைப்பால் தொற்று அபாயம்
டிரான்ஸ்பார்மரை சுற்றிசெடிகள் திண்டுக்கல் காந்திஜி நகர் ரோட்டில் டிரான்ஸ்பார்மரை சுற்றிசெடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. விஷ பூச்சிகள் அதிக அளவில் இருப்பதால் டிரான்ஸ்பார்மரை சுற்றிய செடிகளை அகற்ற மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமசிவம், திண்டுக்கல். ..........-------- அள்ளப்படாத குப்பை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி ராஜகாபட்டி ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் சிதறி கிடக்கிறது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையை கால்நடை மேய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. பாண்டியன், திண்டுக்கல். .........--------தடுப்பு சுவர்கள் சேதம் வத்தலக்குண்டு- உசிலம்பட்டி ரோடு சின்னுபட்டி மஞ்சள் ஆற்றுப் பாலத்தில் தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. பல மாதங்களாக சேதமடைந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் . செல்வம், சின்னுபட்டி................. ---------திறந்தவெளியால் அவதி வேடசந்துார் ஏ.டி. காலனி பகுதி மகளிர் சுகாதார வளாகம் தண்ணீர் இன்றி பராமரிப்பு இன்றி உள்ளதால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதானால் திறந்தவெளியை நாடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது .அ.சந்திர சேகர், மாரம்பாடி. .......---------சாக்கடையில் அடைப்பு பழநி அருகில் மானுார் பள்ளிவாசல் பின் பகுதி மளிகை கடை அருகே சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் தேங்கி உள்ளது. நோய் தொற்று அபாயமும் உள்ளது புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.முகமது ஜின்னா, மானுார் . ..........--------- தேவை புதிய கட்டடம் சாணார்பட்டி வீரசின்னம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி இட வசதி இன்றி குறுகிய இடத்தில் செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது .இடவசதியுடன் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும்.தனபால் வீரசின்னம்பட்டி. .......--------- ரோட்டில் ஓடும் கழிவுநீர் திண்டுக்கல் மெயின் ரோடு மொச்ச கொட்ட விநாயகர் கோயில் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நேய் பரவும் அபாயமும் உள்ளது. மாரிமுத்து,திண்டுக்கல். ..........-------