ரூ.1 .94 கோடி பணி துவக்கம்
பண்ணைக்காடு: பண்ணைக்காடு பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 94 லட்சத்திற்கான பணியை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. ஐயப்பன், பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன், செயல் அலுவலர் ராஜசேகர், பேரூர் செயலர் உதயகுமார், துணைத்தலைவர் லதா ஒப்பந்ததாரர் கதிர்வேல் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக மச்சூர் பகுதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.