உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சாலைப்புதுார் பள்ளி நுாற்றாண்டு விழா

 சாலைப்புதுார் பள்ளி நுாற்றாண்டு விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 1926ல் தொடங்கப்பட்ட சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். அவருக்கு முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சின்ன காளிமுத்து, முன்னாள் மாணவர்கள் டாக்டர் சதாசிவம், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை