உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பாதியில் நிற்கும் ரோடு பணியால் தவிப்பு

 பாதியில் நிற்கும் ரோடு பணியால் தவிப்பு

வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தில் தேர்தலுக்கு முன் துவங்கிய ரோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன் வடமதுரை ஒன்றியத்தில் பல இடங்களில் தார் ரோடு புதுப்பித்தலுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. தேர்தல் காரணமாக மேற்கொண்டு பணிகள் தொடராமல் பழைய ரோடுகள் பெயர்க்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையிலே விடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கூர்மையான ஜல்லிக்கற்கள் மீது நடந்தும், வாகனங்களில் செல்லும் போதும் சிரமப்படுகின்றனர். தேர்தல் நடைமுறை முடிவுற்ற நிலையில் பாதியில் நிற்கும் ரோடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !