உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 8 மாதமாக கிடப்பில் தார் ரோடு பணி

8 மாதமாக கிடப்பில் தார் ரோடு பணி

வடமதுரை: வடமதுரை மோளப்பாடியூரில் இருந்து ஊராளிபட்டி வழியே வெள்ளபொம்மன்பட்டி செல்லும் தார் ரோடு பணி 8 மாதங்களாக கிடப்பில் விடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வடமதுரை ஒன்றியத்தில் பல இடங்களில் தார் ரோடு புதுப்பித்தலுக்கு டெண்டர் விடப்பட்டன. அனைத்து பகுதியிலும் ஒப்பந்ததாரர்கள் உடனடியாக பணிகளை துவக்கினர். மோளப்பாடியூர் – வெள்ளபொம்மன்பட்டி இடையிலான 3 கி.மீ., துார ரோட்டிலும் ஜல்லிக்கற்கள் பரப்பும் வரை பணி நடந்தது. அதன்பின்னர் 8 மாதங்களாகியும் பணி அப்படியே கிடப்பில் உள்ளது. இந்த ரோடுகளை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை மூலம் பணி நடக்கும் இந்த ரோட்டிற்கு இன்னமும் விடிவு காலம் ஏற்படாமல் இருப்பதால் மக்கள் அவதிப்படுவது நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை