உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசில் ஆசிரியர்கள் புகார்

போலீசில் ஆசிரியர்கள் புகார்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி தனியார் பள்ளி பிரச்னை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். வருவாய், போலீஸ், கல்வி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை பின் வகுப்புகளுக்கு திரும்பினர். இதனிடையே நேற்று மாலை வகுப்புகள் முடிந்த பின் ஆசிரியைகள் உள்ளிட்டோர், சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர். இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரிடம் புகார் அளித்தனர்.அதில், பள்ளியில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு, மாணவர்கள், பெண் ஆசிரியர்கள் ,ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய, பள்ளி தளவாடங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு தொடர வலியுறுத்தியிருந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறி கலைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி