உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழக போலீஸ் துறையின் ஈரல் முழுவதும் கெட்டு விட்டது பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு

தமிழக போலீஸ் துறையின் ஈரல் முழுவதும் கெட்டு விட்டது பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு

பழநி:''தமிழக போலீஸ் துறையின் ஈரல் முழுவதும் கெட்டுவிட்டது'' என பா.ஜ., தலைவர் எச்.ராஜா கூறினார்.பழநி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தேர்வு கருத்து கேட்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது : திருப்பரங்குன்றம் மலை படியில் உட்கார்ந்து சிலர் அசைவ உணவு சாப்பிட்டனர்.இதை தமிழக அரசு அனுமதித்துள்ளது. அங்கு உள்ள இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என சொல்வது தவறு. 1931 ஆம் ஆண்டு பிரிவியூ கவுன்சில் அறிவிப்பின்படி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தமானது. அங்கு கட்டுமானங்கள் அமைக்க கூடாது. ஆனால் அதன் பின் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் தலவிருட்சம் கள்ளட்டி மரத்தில் பிறை கொடி ஏற்றுவது தவறானது.திருச்சிக்கு அருகே திருச்செந்துரை கிராமம், பழநி அருகே பாலசமுத்திரம் பகுதிகளில் மக்கள் வசித்து கொண்டிருக்கும் இடங்களை பதிவு செய்ய வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என இடையூறு செய்து வருகிறது.இதனை மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டம் மூலம் சரிசெய்யப்படும். பழநி கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கு அதிக பக்தர்கள் வரும் நிலையில் போகர் சன்னதி எதிரே படக்கடைகள் வைத்து இடையூறு செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் தைப்பூச பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. அண்ணா பல்கலையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஞானசேகருக்கு சிறையில் வலிப்பு என கூறி நாடகமாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். போலீசார் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழக போலீஸ் துறையின் ஈரல் முற்றிலும் தி.மு.க., ஆட்சியில் அழுகிவிட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ