உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடகிழக்கு பருவமழைக்குமுன் முன்னெச்சரிக்கை தேவை; பாதிப்புகளை தவிர்க்க வரும் முன் காக்க முன் வரலாமே

வடகிழக்கு பருவமழைக்குமுன் முன்னெச்சரிக்கை தேவை; பாதிப்புகளை தவிர்க்க வரும் முன் காக்க முன் வரலாமே

தமிழகத்தை பொறுத்தமட்டில் வடகிழக்கு பருவமழை பாசனம், நிலத்தடி நீர் மட்டத்திற்கு பெரும்பங்கு வகிக்கிறது. 2024ல் பருவ மழை நன்கு பெய்தது. தற்போதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. அக்டோபரில் துவங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். இக்காலகட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி சார்ந்த கொடைக்கானல், ஆடலுார், தாண்டிக்குடி, பாச்சலுார், கே. சி. பட்டி, நத்தம், சிறுமலை, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட மலைப் பகுதி ரோடுகளில் மண் சரிவு ஏற்படுவதும், மரங்கள் சாய்வதும், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்குவது, கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும். ரோட்டோரம், குடியிருப்பு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்கள் விழுவதால் மின் வழித்தடங்களில் மின்கம்பங்கள் சேதமடைவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள அபாயம் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன் மின்வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை தீயணைப்புத்துறை, உள்ளாட்சி உள்ளிட்ட அரசுத்துறைகள் மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பருவமழைக்கு முன் பாதிப்பு உள்ள பகுதிகளை ஆய்வு செய்து பேரிடர் முகாம், கனரக இயந்திரங்களை தயார்படுத்த ஆலோசனை கூட்டங்களை முன்பே நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !